Wednesday, December 30, 2009

அஞ்சல் பலகை

அஞ்சல் - ௧ பலகை - ௧
(சங்க உறுப்பினர்களின் தானிச்சுற்றுக்கு மட்டும்)
அஞ்சல் சங்கப்பலகை

அன்பார்ந்த தோழர்- தோழியர்களே!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு- பொங்கல் நல்வாழ்த்துகள்! அஞ்சல் துறையில் பல மாற்றங்கள் புதியன புகுதல் என்ற முறையில் நுழைந்துள்ளன. அதிகார வர்க்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் அறிமுக நிலையிலேயே காணமல் போய்விட்டாலும் அல்லது பலத்த நட்டத்திலே நடந்தாலும் அஞ்சல் ஊழியர்களின் நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லாத நிலையும், அவர்களை கசக்கிப்பிழியும் எஜமானத்துவம் என்றும் குறையப்போவதில்லை.
நிர்வகப்பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என்று பல முறை நமது சங்கம் கோரிக்கை வைத்தும் நான்கு மாதக்கூட்டத்தில் விவாதித்தும் - அதையெல்லாம் கண்டுகொள்ளாத நிர்வாகம் - நிர்வாகப்பிரிவில் வேலைப்பளு அதிகரித்திருப்பதை ஏற்றுக்கொள்ளும் நிர்வாகம் கோட்டங்களில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வரவழைத்தும் பணிச்சுமை குறையாத நிலையில் - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் - கைரேகை வருகைப்பதிவு முறை.
அதிகாரவர்க்கத்தின் மனிதநேயமற்ற தன்மையால் அமைதியற்ற சூழ்நிலையில் மன இறுக்கத்தோடும் பணியாற்றி மரணம் அடைந்த நம் சங்கத் தோழர் குருமூர்த்தியின் நினைவு நம் நெஞ்சை விட்டு இன்னமும் நீங்காத நிலையில்- ஊழியர்கள் மன இறுக்கமின்றி அமைதியாகப் பணியாற்றும் சூழல் ஏற்படுத்தப்படும் - என்று வாக்குறுதி தந்த நிர்வாகம் , இன்று கைரேகை வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்துகிறது.
நேரத்திற்கு வருவதும் -போவதும் மட்டுமே ஓர் ஊழியரின் திறமைக்கு அளவுகோல் என நிர்வாகம் தீர்மானிக்கிறதா ?
கைரேகை வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போதைக்கு ஆட்பட்டு , தூக்கம் இல்லாமல்- இளமையை இழந்து - நிம்மதி இல்லாமல் அலைவதை இந்த நிர்வாகம் கேள்விப்படவில்லையா ?
தமிழகம் என்ன -சோதனைச்சலையா?

வங்கி மூலம் சம்பள பட்டுவாடாவா? -தமிழகத்தில்தான் நிர்வாகபிரிவில் முதலில் அறிமுகம் !
இன்று -கைரேகை வருகைப்பதிவு முறையா?
-தமிழக நிர்வாகபிரிவில் தான் முதலில் அறிமுகம் !
ஏனென்றால், ஐந்துநாள் வேலைக்காக அதிகாரிகள் காலால் இடும் வேலையை தலையால் செய்யும் கொத்தடிமைத்தனம்! விடுமுறை நாளிலும் அலுவலகம் வந்து பணியாற்றும் அவலம்!

ஏனென்றால்-
நிர்வாகப்பிரிவு ஊழியர்களுக்கு விதிமுறைகள் தெரியும் -
போராடத்தெரியாது !

ஒப்பம்/-
ர.அரவிந்தன்
மாநிலச்செயலாளர்

(இது ஒரு விலையில்லா வெளியீடு)

1 comment:

  1. SANKAPALAHAI IMAALAYA VERTRIPERA VAAZHTHUKKAL.
    --------------------------------------------
    Sankapalahai Sankanathamida,Muzhakkamida Vaazhthuhirom, Sankam vaithu Thamizh valartha Ma Madurai Maninaharamthanilirunthu.

    Anbudan Ammaiappan.

    ReplyDelete